தமிழ்: தொன்மையும் உலகளாவிய பெருமையும் தாங்கும் மொழி
முன்னுரை
கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும். மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்திலேயே உருவெடுத்து, ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உயிரோடு வளர்ந்து வரும் மொழி “அது தமிழ்”.
தமிழரின் பண்பாடு என்றல் சங்க புலவர் கணியன் பூங்குன்றனார் கூற்றுப்படி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஆகும். அதாவது எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்று உபசரிக்கும் பண்பாகும். இவ்விரு வரிகளும் சேர்ந்து தமிழ்மொழியின் தன்மை, தத்துவம் , பாரம்பரியம் அனைத்தையும் நிரந்தரமாக சித்தரிக்கின்றன.
தமிழ் உலகம் முழுவதும் பரவிய ஒரு நாகரிகம்
இன்று தமிழ் பேசுபவர்கள் இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதும் பரவியுள்ள 8–9 கோடி மக்கள் இந்த மொழியைத் தங்கள் உயிராகக் கொண்டுள்ளனர்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, கனடா, UK, US போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்.
உலகம் முழுவதும் பேசப்படும் மொழிகளில் தமிழ் பதினைக்காவது இடத்தில் இருப்பது, அதன் உலகளாவிய செல்வாக்குக்கும் தொன்மைக்கும் ஒரு மாபெரும் அடையாளம்.
தமிழ் இலக்கியம்: ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பிரகாசிக்கும் அறிவு
தமிழ் பெருமை வெறும் பழமையில் மட்டுமல்ல, அதன் அறிவிலும் உள்ளது.
• தொல்காப்பியம் , உலகின் மிகப் பழமையான இலக்கண நூல், இன்னும் இன்று வரை ஆய்விற்கும் பயிற்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
• திருக்குறள், 1330 குறள்களுடன் உலகளவில் எண்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மனித நெறிக்கான சர்வதேச வழிகாட்டியாக திகழ்கிறது.
• சித்த மருத்துவம், தமிழரால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையாக உலகின் பழமையான மருத்துவ அமைப்புகள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தமிழ்மொழி என்பது ஒரு “மொழி” மட்டும் அல்ல , அது ஒரு நாகரிகம் என்பதை வலியுறுத்துகின்றன.
டிஜிட்டல் யுகத்தில் தமிழ்
இன்றைய இளைஞர்கள் YouTube, Instagram, Wikipedia, Apps, AI tools போன்ற அனைத்திலும் தமிழ் உள்ளடக்கங்களை பெருமையாக உருவாக்குகின்றனர்.
Unicode மற்றும் Global Tech Support காரணமாக தமிழ் இன்று உலகளவில் வலுவான இணைய மொழிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
முடிவுரை
“கல் தோன்றிய காலம்” முதல் உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் வரை
தமிழ் இன்று தொன்மையும், தொழில்நுட்பமும் இணைந்த உயிர்மொழி.
அன்பும் அறிவும் இணைந்த நாகரிகத்தின் அடையாளமாக தமிழ் என்றும் வாழும்.

