பொங்கல் விடுமுறை முடிவு _சென்னையில் போக்குவரத்து நெரிசல்
பொங்கல் விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து, சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த மக்கள் சென்னை நோக்கி திரும்பியதால் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக நகர்ந்தன.
திரும்பும் பயணிகள் அதிகரித்த நிலையில், போக்குவரத்தை சீர்செய்ய காவல்துறையினர் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

