புதுச்சேரியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை, உப்பளம், நெல்லித்தோப்பு, உருளையான்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட புதுச்சேரி நகர்ப் பகுதிகளிலும், அதே போல் பாகூர், கண்ணிகோயில், காலாபட்டு, சேதராபட்டு, வில்லியனூர், சோம்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் இன்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலை வியாபாரிகள், இருசக்கர வாகன ஒட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

