புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை கண்டித்து, லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக சமூதாய கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் தங்களது கைகளில் பதாகைகள் ஏந்தி, “மாணவர் ஒற்றுமை வாழ்க”, “அரசியல் பழிவாங்கல் ஒழியட்டும்”, “மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனக் கோஷங்களை எழுப்பினர்.
மாணவர்களை ஆதரித்து பல சமூக அமைப்புகளும், மாணவர் இயக்கங்களும் கல்லூரி முன்பு ஒன்று கூடி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவும், மாணவர் உரிமைகளை மதிக்கவும் புதுச்சேரி அரசாங்கத்துக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அவர்கள் வலியுறுத்தினர்.