ரெட்டியார்பாளையத்தில் லட்சிய ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் திறப்பு
புதுவை : புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைமை அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது. கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிள்ளையார் பூஜையுடன் அலுவலக திறப்பு விழா இனிதே நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்கள் துரைசாமி, பூக்கடை ரமேஷ், பிரபாகரன், பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாநில செயலாளர்கள், மண்டல பொதுச்செயலாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
.

