LJK | லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்த உப்பளம் தொகுதி JCM மக்கள்
புதுச்சேரி உப்பளம் தொகுதியை சேர்ந்த JCM மக்கள் மன்ற நிர்வாகி ஆறுமுகம், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு நிகழ்வின்போது, JCM மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ரத்தினமும் உடனிருந்தார். சந்திப்பின் போது, சமூக மற்றும் மக்கள் நல தொடர்பான விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரியாதை சந்திப்பு, கட்சி மற்றும் மக்கள் மன்றத்திற்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

