ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு – JCM மக்கள் மன்றத்தினர் புகார்

புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் தலைவர் ரீகன் ஜான் குமார் தலைமையில் எம்.எல்.ஏ. அங்காளன், எம்.எல்.ஏ. சிவசங்கர் மற்றும் JCM மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் தலைமைச் செயலக அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் ஊர்வலமாக அங்கிருந்து நடந்து சென்று சுகாதார மற்றும் குடும்ப நல இயக்குனரை சந்தித்து மனு அளித்தனர். சுகாதாரத்துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை எனவும் அங்கு பணி புரியும் செவிலியர்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை எனவும் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனரிடம் மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் JCM மக்கள் மன்றம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *