ஐ.நா. மேடையில் உரையாற்றியதற்காக ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு உலக சாதனை சங்கம் சான்றிதழ்
புதுச்சேரி:
லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் உரையாற்றியதற்காக உலக சாதனைகள் சங்கம் வழங்கிய சான்றிதழ் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
9ஆம் தேதி 2025 டிசம்பர் , ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அந்த உரையில், புதுச்சேரி மற்றும் இந்தியாவின் தமிழ் மண்ணை பெருமையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும், தலைமைப் பண்புடனும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தியதாக உலக சாதனை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்வு, இந்தியாவில் இருந்து ஒரு அரசியல் கட்சியின் நிறுவனர், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் உரையாற்றிய ஒரு முன்னோடி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சர்வதேச அரங்கில் புதுச்சேரி மற்றும் தமிழர்களின் குரல் ஒலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோஸ் சார்லஸ் மார்டினின் இந்த சாதனை, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது அரசியல் பயணத்திற்கு ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

