காரைக்கால் – சபரிமலை கோவில் அன்னதானத்திற்கு அனுப்பப்பட்ட பொருட்கள்!
காரைக்காலில் இருந்து ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் அன்னதானம் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்த ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானம் மற்றும் எரிமேலி ஆகிய இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை என 30 நாட்கள் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கும் வகையில் அதற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், நெய், புளி உள்ளிட்ட பொருட்களை ஆண்டுதோறும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி இந்த வருடம் 6 லட்சம் மதிப்புள்ள அரிசி பருப்பு வகைகள் போன்ற சமையலுக்கு தேவையான பொருட்களை காரைக்காலில் உள்ள ஐயப்ப பக்தர்களிடம் கைங்கரியமாக பெற்று அதனை லாரி மூலம் அனுப்பி வைத்தனர். சபரிமலைக்கு உணவு பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி காளிதாசன் உள்ளிட்ட ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க குழுவினர் மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பொருட்களை அனுப்பி வைத்தனர்.

