கோவில் திருப்பணிக்கு நன்கொடை: ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூர் வெள்ளாழர் வீதியில் அமைந்துள்ள அக்கா சாலை விநாயகர் கோவில் திருப்பணிக்காக, லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நன்கொடை வழங்கினார்.
LJK பொதுச்செயலாளர் பூக்கடை ரமேஷ் தலைமையில், கோவில் நிர்வாகிகள் திருப்பணி தொடர்பான பத்திரிகையை வழங்கியதை தொடர்ந்து, கோவில் திருப்பணிக்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கோவில் நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, திருப்பணி பணிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.

