புதுச்சேரியில்”கோ ப்ரீ சைக்கிள்”மோசடி வழக்கில் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

புதுச்சேரியில் Go Free Cycles (கோ ப்ரீ சைக்கிள்) என்ற போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியான சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தியை போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது.

பெங்களூரு தலைமையிடமாக செயல்பட்ட கோ ப்ரீ சைக்கிள் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை, காமராஜர் சாலையில் இயங்கியதில், வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் தருவதாக வாடிக்கையாளர்களை கவர்ந்து ரூ.4.5 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.52,250 வருவாய் தருவதாகவும், 9 மாதங்களில் முதலீட்டின் முழு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் விளம்பரப்படுத்தியது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுமார் 50 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்தனர்.

சில மாதங்கள் மாதாந்திர பணம் திருப்பி கொடுத்த நிலையில், பின்னர் நிறுவனம் எதுவும் கொடுக்காமல் முறைகேடு செய்ய ஆரம்பித்தது. புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்தது. ஏப்ரல் 3ம் தேதி அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி மற்றும் 50 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அதன்பின் அமலாக்கத் துறையினர், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பேன் டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கில், புதுச்சேரி மண்டல மேலாளர் அஜய் முருகன் மற்றும் தலைமை செயல் அதிகாரி நிஷாத் அஹமத் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், நிஷாத் அஹமத் தனது வழக்கறிஞர்கள் மூலம் ரூ.80 லட்சம் பணத்தை சைபர் கிரைம் ஆய்வாளர் உள்ளிட்ட சிலருக்கு கொடுக்கச் சொல்லியதாக தெரிய வந்தது. இதன் பின்னர் சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தியை சஸ்பெண்ட் செய்ய காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு கடந்த மாதம் புதுச்சேரி சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *