புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்!
புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பேரணியாக சென்று சட்டபேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பல வருடங்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுப்படனர். தொடர்ந்து இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யாதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி கொட்டும் மழையில் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் இருந்து பேரணியாக சட்டபேரவை நோக்கி சென்றனர். அப்போது போலீசார் அவர்களை ஆம்பூர் சாலை அருகே தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

