புதுச்சேரி கட்டிடத் தொழிலாளர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகை செய்து, தீபாவளி போனஸ் ₹6,000 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
தொழிலாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போனஸ் கிடையாது என்ற தகவல் பரவியதால் பரபரப்பும் ஏற்பட்டது. அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.