புதுச்சேரி சுகாதாரதுறை பணியாளர்கள் போராட்டம்!

புதுச்சேரி சுகாதார துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், மாதமாதம் தாமதமின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததை கண்டித்து, இயக்குனர் அலுவலக வாயலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் சுமார் 500 ஆஷா பணியாளர்கள் வீட்டுக்குவீடு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார பணிகளில் உதவுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் ரூ.10,000 மாத ஊதியம் பெற்றுவருகின்றனர். கடந்த மார்ச் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, ஊதியம் ரூ.10,000 இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
போராட்டத்தின் போது இயக்குனர் கோவிந்தராஜ் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும், அதன்பின் தர்னா போராட்டம் முடிவடைந்தது.