புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக நிர்வாகிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து அவதூறு கருத்துகளை திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து இழிவுப்படுத்துவதுடன் அவதூறுக் கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்தும், பாலியல் கொடுமைகளுக்கும், பெண்ணுரிமைக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், மாணவர்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பதைக் கண்டித்துப் போராடிய புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கிய புதுச்சேரிக் காவல் துறையையும், அதற்குக் காரணமான பல்கலைக்கழக நிர்வாகத்தையும் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், புதுச்சேரி காவல்துறை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.