புதுச்சேரி தவளக்குப்பத்தில் மீன் வண்டிகளால் கழிவு நீர் பரவி அவதி

தவளக்குப்பம் பகுதியிலிருந்து கடலூர், புதுச்சேரி, மடுகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் வழியாக பல மீன் ஏற்றுமதி வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலைப்பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி, அறிவியல் கல்லூரி, கோயில் மற்றும் சிறு-குறு வியாபாரக் கடைகள் உள்ளதால், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் 20 முதல் 30 மீன் வாகனங்களில் இருந்து மீன் கழிவு நீர் சாலையில் கசியுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலைமை நீடித்தால் சுகாதார சீர்கேடு உருவாகும் அபாயம் இருப்பதாக மக்கள் பயப்படுகின்றனர். இதுபோன்ற மீன் வாகனங்களுக்கு உரிய கட்டுப்பாடுகள் விதித்து, சாலைகளை சுத்தப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசு விரைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *