புதுவை – நெட்டப்பாக்கத்தில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்த பரிதாபம்! நடவடிக்கை எடுக்க JCM மக்கள் மன்றத்தினர் மனு!
காரைக்கால் சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சுகாதாரத்துறை இணை இயக்குனரிடம் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனு அளித்த மன்றத்தினர்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திய மூன்று மாத கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவர் பற்றாக்குறையால் உயிரிழந்த நிலையில், மக்கள் சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி காரைக்கால் JCM மக்கள் மன்றத்தின் தெற்கு கிளை தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நெடுங்காடு கோட்டுச்சேரி கிளை தலைவர் ஆறுமுகம் திருநள்ளாறு கிளை தலைவர் பிரபாகரன் ஆகியோர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சிவராஜ்குமாரை சந்தித்து காரைக்காலில் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் போர்க்கால அடிப்படையில் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சனைகள், மருந்து பற்றாக்குறைகள் ஆம்புலன்ஸ் வசதிகள், பணிபுரியும் செவிலியர்களின் பற்றாக்குறை போன்ற அத்தியாவசிய தேவைகளை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென காரைக்கால் JCM மக்கள் மன்றம் சார்பில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

