போலி மாத்திரை விவகாரம் – 2 பேர் சரணடைந்தனர்!
போலி மாத்திரை தயாரித்து பல மாநிலங்களில் கோடிக்கணக்கில் விற்று தலைமறைவான தொழிற்சாலை அதிபர் உட்பட இரண்டு பேர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். மேலும் போலீஸ் அவர்களை காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி மாத்திரைகள் தயாரித்த தொழிற்சாலையில் உரிமையாளர் ராஜா அவரது உதவியாளர் விவேக் ஆகியோர் புதுவை நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர். அப்பொழுது காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு முன் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே அவர்களது முன்ஜாமினை ரத்து செய்யக்கோரி சிபிசிஐடி போலீஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் புதுவை மருந்து கட்டுப்பாட்டு வாரியமும் ராஜா மீது தனியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுத்தது இது தொடர்பாக மதியம் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆலோசனைகளையும் கேட்டிருந்தனர்.
இந்நிலையில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் ராஜா மற்றும் விவேக் ஆகியோர் புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சரண் அடைந்தனர் தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் காவலில் வைத்து விசாரணையில் நடந்த சிபிசிஐடி போலீசார் உடனடியாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் இதனை அடுத்து போலீஸ்காவல் விசாரணைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்…
இதனை அடுத்து ராஜா விவேக் ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணையின் முடிவில் தான் புதுவையில் இருந்து எந்தெந்த மாநிலங்களுக்கு போலி மாத்திரைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும் விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். போலி மாத்திரை விவகாரத்தில் தொழிற்சாலை அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதால் அரசியல் கட்சியினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

