பள்ளி மாணவர்களுக்கு JCM மக்கள் மன்றம் சார்பில் தீபாவளிக்கு பட்டாசு பெட்டிகள்

திருபுவனை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி பட்டாசு பெட்டிகள் வழங்கப்பட்டன.
திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், பள்ளிச் சிறுவர்களுக்கு பட்டாசு பெட்டிகளை வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். JCM மக்கள் மன்றம் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த பட்டாசுகள் வழங்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.