LJK தலைவரை சந்தித்து மீனவம் காப்போம் இயக்கத்தினர் மனு!
மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன் தலைமையில் நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் நிர்வாக பொறுப்பு மற்றும் வேட்பாளர் பட்டியலில் மீனவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.
மேலும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மீனவர்களுக்கு தற்போது 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து கட்சி சார்பில் மனு அளிக்கப்படும் என லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் உறுதி அளித்தார்.

