GO FREE CYCLE – பணம் திரும்ப பெற வழிவகை செய்யுமாறு கோரிக்கை!

GO FREE CYCLE எனும் நிறுவனம் மூலம் பல லட்சம் ரூபாய் இழந்த 700 க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வருட காலங்களுக்கு மேலாக பணத்திற்கான எந்த ஒரு பதிலும் தெரியாமல் புகார் அளித்தமைக்கு என்ன நடக்கிறது என்றும் அறியாமல் இருந்து வந்தனர்.

அப்பொழுது லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களிடத்தில் அவர்களுக்கு நியாயம் வேண்டியும் அவர்களின் பணம் திரும்ப பெற வழிவகை செய்யுமாறு கோரிக்கையை விடுத்தனர்.

இதனை கேட்டு அறிந்த லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அவர்களுக்கு வழக்கறிஞர் நியமன உதவி செய்து அதன் மூலம் அவர்கள் புகாருக்கு என்ன நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது போன்ற தகவல்களையும் பெறவும் மேற்கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுக்க உதவுவதற்கும் வழி வகை செய்தார்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறும்பொழுது லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் அவர்கள் புயல் காலங்களில் மழை காலங்களிலும் மக்களுக்கு உதவி செய்தார்.

அதேபோல் மீனவர்கள் கைது நடவடிக்கைகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்தார் இதே போல் மருத்துவ ஊழலிலும் உண்மை வெளிச்சத்திற்கு வர மக்கள் பக்கம் நின்று போராடினார் எனவும் இவர்களுக்கும் நியாயம் வேண்டி அவர்களுக்கு ஒத்துழைக்கமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *