தட்டாஞ்சாவடியில் திறக்கப்பட்ட JCM மக்கள் மன்றம்!
புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில், புதுவை முழுவதும் JCM மக்கள் மன்றங்கள் தொடர்ச்சியாக திறக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் ஆலோசனையின்படி, JCM மன்றத் தலைவர் ரீகன் ஜான் குமார் அவர்களின் தலைமையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் மன்றத் தலைவர் ராஜா அவர்களின் ஏற்பாட்டில் JCM மன்ற திறப்பு விழா தாகூர் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் JCM மன்றத் தலைவர் ரீகன் ஜான் குமார் அவர்கள் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றியும் மன்றப் பலகையையும் திறந்து வைத்தார்.
தொடர்ந்து மன்றத்தின் பெண் நிர்வாகிகளுக்கும் தட்டாஞ்சாவடி பகுதி தாய்மார்களுக்கும் புடவைகளை மற்றும் நலத்திட்டங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தட்டாஞ்சாவடி தொகுதி JCM நிர்வாகி ஜெயசங்கர், முதலியார் பேட்டை JCM மன்றத் தலைவர் குமார் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

