காரைக்காலில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி!
புதுவை மாநிலம் காரைக்காலில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து காரைக்கால் போராளிகள் குழுவினர் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

புதுவையில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்தும் இது தொடர்பாக புதுவை அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேளம் அடித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். முன்னதாக கண்டன பேரணியில், புதுவையில் போலி மருந்து தொழிற்சாலைகள் மற்றும் மௌனம் காக்கும் புதுவை முதல்வரை கண்டித்து போராட்டக்காரர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் JCM மக்கள் மன்றம் சார்பில் வடக்கு கிளை தலைவர் முருகானந்தம், தெற்கு கிளை தலைவர் அப்துல் பாசித், நெடுங்காடு கோட்டுச்சேரி கிளை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு புதுவை அரசுக்கு எதிராகவும் முதல்வரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

