காரைக்கால் கார்னிவல் கொண்டாட்டம்- ரூ. 2 கோடி செலவில் பிரமாண்டம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, கலைப்பண்பாட்டு துறை மற்றும் வேளான்துறை சார்பில் கார்னிவல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டிற்கான கார்னில் திருவிழா சுமார் ரூ.2 கோடி மதிப்பில் இன்று (16-01-2026) முதல் வரும் ஞாயிறு (18-01-2026) வரை என 3 நாட்கள் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.
இதைதொடர்ந்து, நேற்று இதற்கான ஆயத்தப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றது. இதில், ரோடு ஷோ, மாரத்தான், படகு போட்டி, நாய் மற்றும் பூனை கண்காட்சி, சின்னத்திரை முன்னணி நட்சத்திரங்களின் இசை மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் ஆகியன நடைபெற உள்ளன.
இதையடுத்து, இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளாமான சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு காரைக்கால் மாவட்ட போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன்படி, கார்னிவல் நிகழ்ச்சி நடைபெறும் உள்விளையாட்டு திடல் பகுதி மட்டுமின்றி பொதுமக்கள் அதிகும் கூடும் பகுதிளிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வை கவர்னர் கைலாஷ் நாதன் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

