LJKவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!
புதுவையில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சியை பிரம்மாண்டமாக கொடியேற்றி தொடங்கிய நிலையில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுவையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் மற்றும் பொதுச்செயலாளர் (சட்டம்) வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் புதுவை வழக்கறிஞர் சங்க பொருளாளர் ராஜ பிரகாஷ், முன்னாள் பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

