LJK மாநில, மண்டல நிர்வாகிகள் நியமனம்
புதுவை : புதுவையில் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் நியமன விழா இன்று புதுவை ரெட்டியார்பாளையத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதற்கட்டமாக மாநிலப் பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொதுச்செயலாளர்கள் மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு மொத்தம் 13 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவிப்பு வெளியிட்டார்.
மாநிலப் பொதுச்செயலாளர்களாக டாக்டர் ஆர். துறைசாமி, பூக்கடை ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலச் செயலாளர்களாக முருகானந்தம், என். அனிதா, வி. ரவி ராஜாராம் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
அதேபோல், மண்டலப் பொதுச்செயலாளர்களாக ஏ.ஹெச். அப்துல் பாஷித், ஜி. ராபட் ஜேசுதாஸ் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில செய்தித் தொடர்பாளராக மகளிர் அணியைச் சேர்ந்த முகமது ஷஜிதா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள் மூலம் கட்சியின் அமைப்பு வலுப்பெறும் என்றும், புதுவை முழுவதும் கட்சியின் செயல்பாடுகள் விரிவடையும் என்றும் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார்.

