LJK-வில் ஐக்கியமான உழவர்கரை தொகுதி முக்கியஸ்தர்கள்
புதுவை உழவர்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தியாகுபிள்ளை நகரைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
இந்த சந்திப்பின் போது, கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்களை ஏற்றுக்கொண்டு, LJK-வில் இணைவதாக அவர்கள் உறுதியளித்தனர். புதிய உறுப்பினர்களை வரவேற்ற தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், கட்சியின் வளர்ச்சியில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், LJK பொதுச்செயலாளர் துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்து, கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

