MLA அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களுக்காக களத்தில் இறங்கினர்

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மரக்கிளைகள் விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருக்கவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்களில் மரக்கிளைகள் படர்ந்து இருப்பதால் அவ்வப்போது மின் இணைப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் பருவ மழை தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் காற்றில் மரக்கிளைகள் மின் கம்பங்கள் மீது விழுந்தால் பொதுமக்களின் உயிர்களுக்கும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் உதவியுடன் அவ்வாறு மரக்கிளைகள் மின் கம்பங்கள் மீது உள்ளதை ஒவ்வொரு பகுதி வாரியாக அகற்றி வருகிறார். மின்துறை அனுமதி பெற்று மின் இணைப்புகளை துண்டித்து பாதுகாப்பான முறையில் அங்காளன் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.