மாயமான பெண் கொலை! கொலையாளி கைது!
மாயமான பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கழுத்தை நெறித்து படுகொலை.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த உருவையாறு மேம்பாலம் அருகே சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை திறந்த போது, 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் புதுச்சேரி, வில்லியனூர் பழைய தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி (45), என்ற பெண் கடந்த 5-ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவரது அண்ணன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். எனவே கொலை செய்யப்பட்டிருப்பது தமிழ்செல்வியாக இருக்கலாமா என்ற சந்தேகத்தில் போலீசார் அவரது புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களை சாக்கு முட்டையில் கட்டிய பெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்த போலீசார் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழ்செல்வி தான் என தெரியவந்ததால் உடனடியாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இறந்தது தமிழ்ச்செல்வி என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் தமிழ்ச்செல்வி தனது கணவர் சந்திரனிடம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனது சிறு வயது மகளுடன் தனியாக வீடு வாடகை எடுத்து வசித்து வந்துள்ளார். இதனிடையே கொம்பாக்கம், ஒதியம்பட்டு பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் ஐயப்பன் என்பவர் தனது வீட்டிற்கு கதவு போட வேண்டும் என கூறியுள்ளார். அதிலிருந்து ஏற்பட்ட தொடர்பு காரணமாக அவருடன் தமிழ்ச்செல்வி நெருக்கமாக இருந்துள்ளார். என்பதும் அதன்படி கடந்த 5 ஆம் தேதி ஐயப்பனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றது. தெரியவந்ததைத் தொடர்ந்து போலீசார் ஐயப்பனை கைது செய்தனர்.

மேலும் தொடர்ந்து ஐயப்பனிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அடிக்கடி இருவருக்கும் தந்தையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஐயப்பன் தமிழ்ச்செல்வியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு சாக்கு மூட்டையில் கட்டி உருவையாறு மேம்பாலம் கீழே வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் இதே போன்று வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு வானூர் பகுதியில் அந்தப் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

