குப்பை கொட்டுவதை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 2000 ரூபாய் சன்மானம்

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து உள்ளாட்சி துறையின் உத்தரவின் பேரில் உழவர்கரை நகராட்சி கடந்த வாரம் அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை கிரீன் வாரியர் நிறுவனம் மூலம் அகற்றி கட்டிட கழிவுகளை சமன் செய்து குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அப்பகுதியில் வாகனங்கள் மூலம் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து உடனடியாக அவற்றை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நகராட்சி ஊழியர்கள் அடங்கிய குழுக்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் புதுச்சேரி அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பை /கழிவுகளை கொட்டும் வாகனங்களின் விவரங்களை புகைப்படம் எடுத்து நகராட்சியின் 7598171674 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2,000/- சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *