கிராமத்து மக்களுக்கு பேருந்து வசதி கோரி LJK தலைவர் மனு
புதுவை இருளஞ்சந்தை மற்றும் தென்னம்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்து வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனு அளித்தார்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அன்றாடப் போக்குவரத்துக்கு கடும் சிரமம் எதிர்கொண்டு வருவதாகக் கூறி, இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன் சம்பந்தப்பட்ட துறை ஆணையரிடம் நேரில் சந்தித்து LJK தலைவர் மனு வழங்கினார்.
போக்குவரத்து துறை ஆணையர் அமன் சர்மா நேரில் மனுவை பெற்றுக்கொண்டார். பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வின் போது LJK கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

