நேரு எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறவும், பாலியல் புகார் விசாரணைக் குழு அமைக்கவும் வலியுறுத்தி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் சேவை இயக்கத் தலைவர் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் களம், மாணவர் கூட்டமைப்பு, காரைக்கால் மக்கள் போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.