பாண்டி மெரினா கடற்கரையில் லட்சிய ஜனநாயக கட்சி தொடக்க விழா – 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
புதுச்சேரி:
புதுச்சேரி சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையிலான லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழா, பாண்டி மெரினா கடற்கரையில் வெகுவாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் புதுச்சேரி முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கட்சி தொடக்கத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, லட்சிய ஜனநாயக கட்சியின் கொடி பாடல் வெளியிடப்பட்டது. “சொல் அல்ல செயல் தான் நமது லட்சியம்” என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல், கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் சேவை நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், தொடக்க விழாவில் உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் கட்சியின் உறுதி மொழியை வாசிக்க, கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
லட்சிய ஜனநாயக கட்சியின் தொடக்க விழா புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய எழுச்சியையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

