புதுச்சேரியில் தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், புதுச்சேரியில் தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன
காலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை,மாலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை
அதே நேரத்தில், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டிடங்கள் உள்ளிட்ட அமைதிப்பகுதிகளின் 100 மீட்டர் சுற்றளவில் பட்டாசு வெடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சத்தமில்லா தீபாவளியை கொண்டாடவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.