புதுச்சேரியில் கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளருக்கான எழுத்து தேர்வு

புதுச்சேரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, திருவள்ளுவர் அரசு பெண்கள் கல்லூரி, அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் அரசு பள்ளி, பெத்தி செமினார், அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற ஆய்வின் போது, தேர்வு மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர், மின்சாரம், காற்றோட்டம், போதிய வெளிச்சம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியர் பரிசோதித்தார்.
தேர்வுகள் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.