புதுச்சேரியில் ரூ.436 கோடி மேம்பால பணியை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை ரூ.436 கோடியில் 4 கி.மீ. புதிய மேம்பாலம் கட்டும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார்.
மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது. இந்த மேம்பாலம் 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ரூ.25 கோடியில் 14 கி.மீ. ECR சாலை மேம்படுத்துதல் மற்றும் ரூ.1,588 கோடியில் புதுச்சேரி முதல் பூண்டியான் குப்பம் வரை நான்கு வழிச்சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.