புதுச்சேரியில் விடுதலை நாள் கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றார் முதல்வர் ரங்கசாமி!
புதுச்சேரி:
புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, மாநில முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் இன்று காலை கடற்கரை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சட்டப்பேரவை தலைவர் ராஜவேலு, உள்துறை அமைச்சர் நமசிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, திமுக எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர்கள், மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
விழா நிகழ்வில், மாணவர்கள் மற்றும் கலாச்சார குழுக்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள், மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.

