புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசின் ஓய்வூதிய மசோதாவை கண்டித்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான ஓய்வூதியத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதியக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், மேலும் குழுவின் வரம்பு குறிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அரசு தங்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.