புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர் போராட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஒருவர் விடுதி வார்டனாக தொடர்வதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
வார்டன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்