புதுவை இடைக்கால பட்ஜெட் தாக்கல்
புதுவை சட்டமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஐந்து மாதங்களுக்கு இடைக்கால நிதி திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். புதிய நிதியாண்டு தொடங்குவதற்கு முன் அரசின் செலவினங்களும், திட்டங்களும் தடையின்றி செயல்பட இந்த இடைக்கால ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.5,396 கோடி மதிப்பிலான இந்த இடைக்கால பட்ஜெட், அரசுத் துறைகள் தொடர்ந்து செயல்பட தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

