50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் JCM மக்கள் மன்றத்தில் இணைந்தனர்

புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், திருபுவனை தொகுதி JCM மக்கள் மன்ற வழக்கறிஞர் அணி தலைவர் ஆனந்தன் தலைமையில், திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் முன்னிலையில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை JCM மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பு நிகழ்வில் பல்வேறு சமூக, அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.