லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியினர்!
புதுவை காங்கிரஸ் கட்சி நிர்வாகி தங்க கலைமாறன், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் சரி இல்லாததால் தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் அக்கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.
LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்து கொண்டனர்.
முன்னதாக தங்க கலைமாறன் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

