LJK தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்த புதுவை கிரிக்கெட் வீரர்கள்!
புதுவை மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் புதுவை கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாததை கண்டித்து லட்சிய ஜனநாயக கட்சி தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியிருந்தார். இந்த நிலையில் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பேசியதை அறிந்த வீரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு தொடர்ந்து புதுவை அணியில் இடம் கிடைப்பதில்லை எனவும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் வீரர்கள் தங்களது குறைகளை LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினிடம் கூறினர்.

புதுவை கிரிக்கெட் அணியில் சேர்க்க குறைந்தது 15 லட்சம் ரூபாய் கேட்டு கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி பேரம் பேசுவதாக புதுவை கிரிக்கெட் வீரரின் பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்தனர். இந்த நிகழ்வின்போது JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

