LJKவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் மகன்
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த புதுவை முன்னாள் சபாநாயகர் VMC சிவகுமாரின் இளையமகனும் பாஜக முன்னாள் நிர்வாகியுமான மனோ என்கின்ற VMC மனோகரன் லட்சிய ஜனநாயக கட்சியில் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முன்னிலையில் இணைந்தார்.
VMC மனோகரன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு மிக சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய நிலையில் தன்னை LJKவில் இணைத்துக் கொண்டார்.

