100க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்!
சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய நிலையில் புதுச்சேரி ஊசுடு தொகுதியை சேர்ந்த ஜவஹர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.
JCM மக்கள் மன்றத்தின் தவளக்குப்பம் கிளை தலைவர் சுரேஷ் உடன் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை நேரில் சந்தித்து தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.

