சாதனை புரிந்த இந்திய பெண் வீராங்கனை

இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ டீம் ஓபன் தடகள போட்டியில் மகளிர் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.


மகளிர் குண்டு எறிதல் பிரிவில் பங்கேற்று , முன்னதாக இருந்த 16.03 மீட்டர் சாதனையை முறியடித்து, 16.63 மீட்டர் தூரம் குண்டு எறிந்து புதிய தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார், இந்திய வீராங்கனை கிருஷ்ணா ஜெயசங்கர் மேனன்.

இந்த சாதனை மூலம் இந்திய விளையாட்டு வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ள கிருஷ்ணா ஜெயசங்கர் மேனனுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *