மதுரையில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி: எம்ஜிஆர் மைதானம் 16 நாட்கள் மூடல், பாதுகாப்பு அதிகரிப்பு

மதுரையில் நடைபெற உள்ள 14வது ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை, உள்ளூர் வீரர்களும் பயிற்சியாளர்களும் மைதானத்தில் நுழைவது மற்றும் பயிற்சி செய்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை மதுரை எம்.ஜி.ஆர் அரங்கில் நடக்கிறது. உலகின் 12 முன்னணி நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் அணிகள் இதில் பங்கேற்கின்றன. மொத்தம் 31 போட்டிகள் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளும், போலீஸ் குவிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கவனம் ஈர்க்கும் இந்த தொடர் எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கில் சிறப்பாக நடைபெறுவதற்காக பயிற்சி தடை உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *