ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுவது சந்தேகம்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் (ODI) தொடரில் இந்திய அணியின் நடுத்தர வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில் அவர் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மருத்துவ அறிக்கைகள் மற்றும் தேசிய தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே அவரது பங்கேற்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

தென்னாப்பிரிக்கா – இந்தியா ஒருநாள் தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்க உள்ளது. ஷ்ரேயாஸ் முழுமையாக குணமடைந்தால் மட்டுமே அவர் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *