நாகை செல்கிறார் தவெக தலைவர் விஜய்… பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பிரசாரம்…

தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் வழிநெடுக குவிந்தனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள மரக்கடைப் பகுதிக்கு செல்வதற்கே ஐந்து மணி நேரத்திற்கு மேலான நேரம் எடுத்துக்கொண்டது.
கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், அரியலூரி பிரசாரத்தை முடிக்கவே நள்ளிரவு வரை எடுத்துக் கொண்டதாலும், பெரம்பலூரில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால், நள்ளிரவு வரை விஜய் வருவார் என்று காத்திருந்த பெருவாரியான கூட்டம் ஏமாற்றத்தில் வீடு திரும்பியது.
நேரம் இல்லாத காரணத்தால் அன்று இரண்டு மாவட்டங்களில் மட்டும் தனது பரப்புரையை மேற்கொண்டதால், தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தின்போது, இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் தனது பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டு சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதற்காக சென்னை இசிஆர் நீலாங்கரை அவரது வீட்டில் இருந்து தற்போது சென்னை விமான நிலையம் புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்றடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகப்பட்டினம் செல்கிறார். நாகப்பட்டினத்தில் சரியாக காலை 11 மணியளவில் விஜய் தனது பரப்புரையை மேற்கொள்கிறார்.
அதை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் திருவாரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் தனது பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். இரண்டாம் கட்டமாக மக்களை நேரடியாக சந்தித்து தனது பரப்புரையை தவெக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ளார்.
விஜய்யின் பரப்புரைக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. தவெக தலைவரின் பரப்புரை 11 மணி அளவில் தொடங்கும், 30 நிமிடங்களுக்குள் உரை முடிக்கத் திட்டம், வாகனங்களை அனுமதி இல்லாமல் பின்தொடரக்கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.