குடிநீர் குடித்து உயிரிழந்த அவலம்.. அரசு அலட்சிய போக்கு… ஜோஸ் சார்லஸ் மார்டின்


புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்தவர்களின் குடும்பத்தினரை நாம் சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினோம்.

புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பொதுமக்கள் பருகி உள்ளனர்.

இதில் நூற்றுக்கணக்கானோர் வாந்தி, பேதி ஏற்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த விவகாரத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து கூறியுள்ள சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின், “புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்தவர்களின் குடும்பத்தினரை நாம் சமீபத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினோம்.

மக்களுடன் கலந்துரையாடிய பின் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில், குடிநீரை பருகவே அவர்கள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பது குறித்தும், இந்தப் பிரச்னையால் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும், விளக்கி பேசியிருந்தேன். மேலும் குடிநீர் பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியிருந்தேன்.

அதோடு 6 பேர் உயிரிழந்தும் அரசு அலட்சியமாக நடந்துகொண்டதையும், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, உயிரிழப்புக்கான காரணத்தை அரசு உறுதிப்படுத்தாத அவலத்தையும் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்ந்து எனது முன்னெடுப்பை செய்தியாக வெளியிட்டுள்ள India Today-வுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *